Advertisements

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் ஆண்கள் தொடரின் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் ஆண்கள் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் – டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 98 பந்துகளில் 5 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய டிம் சீபர்ட் 72 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன்மூலம் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தி ஹண்ட்ரட் ஆண்கள் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Advertisements


