மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்.!

Advertisements

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை வீடு தேடி சென்று நிவாரண பொருட்களை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழங்கினர்.திருவாரூர் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான பால், ரொட்டி,மாவு பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.

இதை தொடர்ந்து, அனைத்து வீடுகளிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக திருவாரூர் நகர பொறுப்பாளர் ஆதிநாதன் சுந்தர், தொண்டரணி நிர்வாகிகள் சங்கர் 27 ஆவது வார்டு பொறுப்பாளர்கள், நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *