Thiruvannamalai : அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழா.!

திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளான அண்ணாமலையார்,உண்ணாமலையார் அம்மன் விநாயகர், சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த பரணி தீபத்திருவிழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகை ரோஜா, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை யடுத்து, மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு 11 நாட்களுக்கு தீபஜோதியாக காட்சியளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *