Advertisements

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவி ஒன்று குடியிருப்பதாகவும் மந்திரவாதி ஒருவர் செய்வினை செய்ய முயற்சி செய்வதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன . சென்னை ராயப்பேட்டையில் எம்ஜிஆர் மாளிகை என்று அழைக்கப்படும் அதிமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களாக இங்குதான் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தார் . இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் ஒரு மந்திரவாதி சங்கு ஊதியபடி இந்த அலுவலகத்தை சுற்றி வந்துள்ளார் இது தவிர ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு அவர் சங்கு ஊதியபடி வந்துள்ளார்
அலுவலக ஊழியர்கள் அவரைபா பிடித்து விசாரித்த போது நான் எத்தனை நாள் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறேன் . உங்களுக்கு இப்போது தான் கண் தெரிந்ததா? என்று சொல்லிவிட்டு போய்விட்டார் அதன் பின்னர் அவரைக் காணவில்லை . இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏதோ ஒரு ஆத்மா குடியிருப்பதாகவும் இதனால்தான் இங்கு நடைபெறும் ஆலோசனை கூட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன என்றும் சில நம்பூதிரிகள் கருத்துக்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது
இதனை சரி செய்வதற்கு அலுவலகத்தில் முன்பக்கம் உள்ள தலைவர்கள் சிலையை பின்பக்கமாக மாற்றி வைக்குமாறு நம்பூதிரிகள் சொல்லி உள்ளனர். அந்த ஆத்மா தற்பொழுது ஆக்ரோஷமாக சுற்றி வருவதாகவும் நம்பூதிரிகள் திகிலூட்டும்படியாக பேசியிருக்கின்றனர் . இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரிவித்தனர்
Advertisements


