இந்த கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது..? மாணவனுக்கு நடந்தது என்ன..!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகிலுள்ள செங்குணம் கொள்ளைமேடு பகுதியில் செயல்பட்டு வருக்கிறது அரசு தொடக்கப் பள்ளி. அந்த பள்ளியில், மாணவ – மாணவிகளுக்கு சத்துணவில் முட்டை வழங்குவதே இல்லை. அந்த முட்டைகளை சத்துணவு தயாரிக்கும் பெண் பணியாளர்கள் வெளியில் விற்பனை செய்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.இந்த சூழலில், அந்த பள்ளியில் சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இல்லை எனச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்து கேள்வியெழுப்பி இருக்கிறான்.

இதனால் கோபமடைந்த சத்துணவு பெண் பணியாளர்கள் இருவரும் வகுப்பறைக்குள் புகுந்து அந்த மாணவனை துடைப்பத்தால் தாக்கினார்கள் அந்த அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகி, பெற்றோர்களை பதைபதைக்க செய்திருக்கிறது. வகுப்பறைக்குள் ஆசிரியை மற்றும் சக மாணவர்கள் இருக்கும்போதே உள்ளே புகுந்து அந்த குறிப்பிட்ட மாணவனை பிடித்து துடைப்பத்தால் தாக்குகின்றனர் இரண்டு பெண்கள்.டீச்சர், டீச்சர் என்று அந்த மாணவன் கத்திக்கொண்டே வகுப்பறைக்குள் சுற்றிச் சுற்றி ஓடுகிறான். ஆசிரியை தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறார். பேரப்பிள்ளை வயதான அந்த மாணவனை நாய்ங்க நாய்ங்க என்று இரண்டு பெண்களில் ஒருவர் திட்டித் தீர்க்கிறார்.

இந்த காட்சிகளை வகுப்பறையில் இருந்த மாணவிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. மாணவிகளின் கைகளில் எப்படி செல்போன் வந்தது என்பதும் கேள்வியாக எழுக்கிறது. இதற்கிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் முனியம்மாள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பெண்ட் வெறும் கண் துடைப்பு நாடகம். கொஞ்ச நாட்களில் இது மறைந்து போகும். மீண்டும் அவர்கள் வேலைக்கு வந்துவிடுவார்கள். இப்படிதான் ஸ்டாலின் ஆட்சியில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பள்ளியில் சிறுமியை ஆசிரியர்களே பாலியல் தொந்தரவுகள் செய்கிறார். அப்போதும் இந்த அரசு இதையெல்லாம் தட்டி கேட்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறது.. ஆக மொதத்தில் ஸ்டாலின் அரசு கைலாகத அரசு என்றுதான் கூற முடியும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *