கொள்ளையில் ஈடுப்பட்ட 5 பேர் கொண்ட கும்பலில் இரண்டு பேர் கைது..!

Advertisements
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தம்மம்பட்டி அடுத்த மன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் இவர் மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலராக உள்ளார். இவருக்கு இரண்டு மனைவியும் உள்ளனர். தனலட்சுமி விஜயகுமாரி ஆகிய இருவர் உள்ள நிலையில் தனலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் ஜெயக்குமாரி மற்றும் ராம்குமாரின் மனைவி காந்திமதி ஆகியோர் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் காரில் முகமுடி அணிந்து சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தொடர்ந்து விஜயகுமாரி காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் வீட்டில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதுகுறித்து விஜயகுமாரி தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை கொண்டு வந்தனர். இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்சியில் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் நம்பரை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது திருப்பூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் கார் என்பதும் அவர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கார் சர்வீஸ் செய்வதற்கு பட்டறையில் இருந்த்தாகவும், அந்தக் காரை திருப்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் ஓட்டி சென்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து ஆனந்த குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த குமாரின் நண்பர் சுபாஷ் சந்திர போஸையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஐந்து பேர் கொண்ட கும்பலில் மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து போலீசார் குறுகையில் 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் மற்ற மூன்று பேரையும் விரைவில் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை மீட்கப்படும் என தெரிவித்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *