சீனா – அமெரிக்கா வர்த்தக மோதல்..! இதில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?

Advertisements

அமெரிக்கா- சீனா மோதல் போக்கு தீவிரமடைந்து வருகிறது. டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு சட்டதிட்டங்கள் , கட்டுப்பாடுகளை அமெரிக்காவுக்கும் , பல உலக நாடுகளுக்கு வரி விதிப்பையும் சுமத்தி வருகிறார். அந்த வகையில் சீனா – அமெரிக்கா வர்த்தக போர் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்பு சில இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்புடன் வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இருப்பினும் இதிலும் சில சிக்கல்கள் இருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு என்பது 10 நாடுகளை உள்ளடக்கியது இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூணை, மியான்மார், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகியவை ஆகும் .இந்த நாடுகளுடன் கடந்த 2009ம் ஆண்டு இந்தியா பொருளாதாரம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தத்தை போட்டிருந்தது. இந்த
ஒப்பந்தத்தின் மூலம் தென்கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது. அந்த நாடுகளும் நமக்கும் வரிச்சலுகைகளை கொடுத்தது. இதனால் $43.6 பில்லியன் வர்த்தக இழப்பு ஏற்பட்டது.

இந்த 10 நாடுகளிடம் இவ்வளவு பலம் இருக்காதே! எப்படி இது சாத்தியமாகியது? என்று கேள்வி எழுந்தது. இதனை ஆய்வு செய்தபோது ‘restamp’ என்கிற மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்தியா தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான FTA ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தவும் முடியும். நமக்கு இருக்கும் வாய்ப்பு இதுதான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்கிழக்க ஆசிய நாடுகள் வழியாக சீனா இந்தியாவுக்கு என்ன செய்ததோ, அதையேதான் அமெரிக்காவுக்கும் செய்திருக்கிறது. இதனால் அமெரிக்கா வர்த்தக இழப்பை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா சீனாவுக்கு $439 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால் இறக்குமதி அதிகம். இதனால் இழப்பு மட்டும் $295 பில்லியன். கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவின் மொத்த வர்த்தக இழப்பு $882 பில்லியனில் இருந்து $1.2 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், சீனா $300 பில்லியனில் இருந்து $823 பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தை உயர்த்தியிருக்கிறது. கொஞ்சம் விட்டால் 1 டிரில்லியனை தொட்டுவிடும். எனவேதான் அமெரிக்கா சீனா மீது 34% வரியை அறிவித்திருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *