Advertisements

திருநள்ளாற்றில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி முன்னிட்டு நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழாவில் தருமபுர ஆதீனம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாற்றில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி முன்னிட்டு நளதீர்த்தத்தில் சொர்ண கணபதி ஹோமம், மஹா சங்கல்ப்பம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் பின்னர் யானையில் தங்க பூரண கும்பம் ஏற்றி நளதீர்த்த குளத்தின் நான்கு வீதிகள் வழியாக தருமை ஆதீன திருமுறை பாடசாலை மாணவர்கள் திருமுறை பாராயணம் பாடினார்.
இதையடுத்து, நள தீர்த்தத்தில் கங்கா பிரதான பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில், தர்மபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மஹா சங்கல்ப்பம் செய்யப்பட்டு மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை சனிப்பெயர்ச்சியின் பலன்கள் மற்றும் சிறப்புகள் குறித்து சிவாச்சாரியார்கள் எடுத்துரைத்தனர்.
Advertisements


