மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு..!

Advertisements

மீனவர்களுக்கு நிவாரண நிதி 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பரப்புரை மேற்கொண்டார். இதில், பொன்னேரி மாவட்ட செயலாளர் பலராமன் ஆகியோர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையானது என்றும் திமுக கூட்டணி தேர்தல் வரை நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகியுள்ளது என்றும்  தெரிவித்தார்.

அதிமுக லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி என்றார். திமுக வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர் என்றும் விவசாயத் தொழிலாளிகள் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என்று கூறி திமுக ஏமாற்றியது என்றும் குற்றம் சாட்டினார். மீனவ மக்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நிவாரண நிதியாக  12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *