நிலவுக்கு மனிதனை அனுப்பும் முன்னோடித் திட்டம்..!

Advertisements

நிலவில் ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என ஷத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் பேராசிரியர் நிகர்ஜாஜி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், ஷத்தீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பேராசிரியருமான நிகர்ஜாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், சந்திராயன்- 4 திட்டத்தில் ரோவரை நிலவுக்கு அனுப்பி அங்குள்ள மண் உள்ளிட்ட பொருட்களை பூமிக்கு எடுத்து வரப்படும் என்றும் இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முன்னோடி திட்டம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நிலவில் தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்டவைகளை உருவாக்குவது குறித்தான ஆராய்ச்சிகளை தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *