Mumbai fire:மும்பையில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உடல் கருகி பலியான சோகம்!

மும்பை: மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம்குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று(அக்.,06) தீ விபத்து ஏற்பட்டது. முதலில் கீழ் தளத்தில் இருந்த கடையில் மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிய துவங்கியது. பின்னர் மளமளவெனத் தீப்பரவியது.

முதல் தளத்தில் வசித்து வந்த பிரேம் குப்தா, அவரின் மனைவி மஞ்சு பிரேம் குப்தா(30), அனிதா குப்தா(39), குழந்தைகள் நரேந்திர குப்தா(10) மற்றும் பாரிஸ் குப்தா(7) ஆகிய 5 பேரும், இவர்களைத் தவிர அடையாளம் தெரியாத 2 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்துகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் சிறிதுநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம்பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *