Thirumavalavan:விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை!

Advertisements

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிளவுவாத சக்திகள் என தவெக தலைவர் விஜய் வெளிப்படையாகக் கூறவில்லை. மேம்போக்காகப் பேசி இருக்கிறார்.

சிறுபான்மையினர் மீதான விஜயின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா?

பாசிச கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான். நாங்கள் அதை எதிர்க்கிறோம். பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.

தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை.திமுக மற்றும் திமுக அரசை, கலைஞர் குடும்பத்தை எதிர்ப்பதாகவே விஜயின் பேச்சு உள்ளது என்று அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *