Premalatha Vijayakanth:இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களைக் காப்பாற்ற முடியாது!

Advertisements

சென்னை:சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

* 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.

* சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை.

* கள்ளச்சாராயம் விவகாரம்குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

* அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்.

* ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.

* கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிகக் கவனமாகக் கேட்டார்.

* போதைப்பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள்குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார்.

* கவர்னர் உரிய தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.

* குடியைக் கொடுத்துக் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.

* இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களைக் காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *