Mineral smuggling vehicle: பறிமுதல் செய்ய உத்தரவு!

கனிமவள கடத்தல் வாகனங்களைப் ஒரு மாதத்தில் பறிமுதல் செய்ய உத்தரவு!

சென்னை: கனிமவள கடத்தல் வழக்குப் பதிவு செய்த 30 நாளில் வாகனங்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகன பறிமுதல் தொடர்பான நடவடிக்கை எடுக்கக் காவல் அதிகாரிகளுக்கு வழிகாட்டு விதிகளை டிஜிபி பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக நீதிபதி ராமகிருஷ்ணன் கூறினார்.

2015 முதல் 2023 வரை தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோத கனிமவள கடத்தல் சட்டத்தின் கீழ் 59,105 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. கனிமவள கடத்தலில் ஏடுபட்டதாக 63,542 வாகனங்கள்மீது வழக்குப் பதிவு செய்து 2,218 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 2,218 வாகனகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது வேதனை அளிக்கிறது. பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

கனிமவள சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விசாரிக்க மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை வழங்கியுள்ளது. சம்பநதப்பட்ட மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தை அணுகி தங்கள் வாகனங்களை மீட்கும் நடவடிக்கையை எடுக்கலாமென நீதிபதி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *