டிவிஎஸ் நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு..!

கட்ச் ராண் பகுதியின் இயற்கை எழிலை உலகறியச் செய்வதிலும், அங்கு இருசக்கர வாகனச் சுற்றுலாவை மேம்படுத்திவதிலும் டிவிஎஸ் நிறுவனத்தின் முயற்சிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கட்ச் மண்டலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் மாநிலச் சுற்றுலாத்துறையுடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது. இதையடுத்து அங்கு இருசக்கர வாகனச் சுற்றுலா மேம்பட்டுள்ளது.

இது குறித்த கையேட்டை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், சுதர்சன் வேணு ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.

இதைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், சுதர்சன் வேணு ஆகியோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கட்ச் மண்டலத்தின் அழகை வெளிப்படுத்துவதுடன் அங்கு இருசக்கர வாகனச் சுற்றுலாவை மேம்படுத்த அந்தக் கையேடு உதவுதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *