
உக்ரைனின் அமைதித் திட்டத்தைக் கொண்டுசெல்லும் அமெரிக்கத் தூதர் ரஷ்யாவிடம் அடுத்த வாரத்தில் பேச்சு நடத்த உள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூன்றாண்டுகளாகச் சண்டை நீடிக்கிறது.
இந்நிலையில் போரை நிறுத்தி அமைதி நிலவச் செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஓர் அமைதித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
இதை உக்ரைன் ஏற்றுக்கொண்டால் அடுத்து ரஷ்யாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று அறிவித்தார். அமெரிக்க, ஐரோப்யி ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் இது குறித்து ஜெனீவாவில் உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
இந்நிலையில் அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை எடுத்துக்கொண்டு அந்நாட்டின் தூதர் ஸ்டீவ் விட்காப் அடுத்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்று ரஷ்யாவுடன் பேச்சு நடத்த உள்ளார்.
இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளரான யூரி உசாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

