Thirukkural Competition: திருக்குறள் ஒப்புவித்ததில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சாதனை விருது!

Advertisements

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடந்த திருக்குறள் ஒப்புவித்ததில் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களைச் சகாயராஜ் வழங்கினார்.

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக போபால் கிளைக்குத் திருக்குறள் போட்டியில் 856 பள்ளிகள் பங்கேற்றதற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை விருது வழங்கப்பட்டது

வேலூர்மாவட்டம், காட்பாடியில் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் சாதனைக்கான சான்றைப் பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதனிடம் வழங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேலூர் சென்னை கிளைகளில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தது. இதில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 856 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் திருக்குறள் ஒப்புவித்ததில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களை இவ்விழாவில் சகாயராஜ் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில் ரமணி சங்கர்,.சங்கர்.ஆழி பதிப்பக உரிமையாளர் ஆழி செந்தில்நாதன் கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஜி விசுவநாதன் பேசுகையில் மத்திய மாநில அரசுகள் கல்விக்காகப் போதிய நிதியை ஒதுக்கவில்லை கல்வியில் கவணம் செலுத்தி போதிய நிதியை ஒதுக்க வேண்டும், அப்போது தான் நாமும் வளர்ச்சியடைய முடியும் மேலும் எந்த ஒரு நாடு கல்வி சுகாதாரத்தை இலவசமாகத் தருகிறதோ அந்த நாடுகள் நல்ல முன்னேற்றம் அடையும், மக்களும் மின்சாரம் இலவசமாக வேட்டி சேலைகள் ஆகியவைகள் எல்லாம் அரசுகளிடம் கேட்காமல் கல்வி சுகாதாரத்தை இலவசமாகக் கேட்க வேண்டும், அதுபோல் அரசு கல்லூரிகளில் உயர் கல்வி பெறும் மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது, மேலும் அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும் கல்வியில் முன்னேற்றமடைந்தால் நமது நாடும் நல்ல முன்னேற்றமடையும் எனப் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *