Pakistani Woman: இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Advertisements

இந்திய காதலரை மணக்க பாகிஸ்தான் பெண் சீமா குலாம் ஹைதர் இந்தியா வந்தார். அவரை வாகா எல்லையில் வருங்கால கணவர் சமீர் கானும், அவரது தந்தையும் வரவேற்றனர்.

அமிர்தசரஸ்: மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த வாலிபர் சமீர் கான். இவர் தனது தாயின் செல்போனில் இருந்த ஜவேரியா கானும் (வயது 21) என்ற பெண்ணின் படத்தை பார்த்ததுமே காதல் வயப்பட்டார். அந்த பெண், பாகிஸ்தானின் கராச்சி நகரத்தைச் சேர்ந்தவர். சமீர் கானின் தாய்வழி உறவினரான அஸ்மத் இஸ்மாயில் கானின் மகள்.

சமீர் கானின் காதலை ஜவேரியா கானுமும் ஏற்றுக்கொண்டார். இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டிலேயே இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. ஆனால் இருவரும் நேரில் சந்திக்க 5½ ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா வருவதற்கான ஜவேரியா கானுமின் ‘விசா’ கோரிக்கை, இருமுறை இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், பஞ்சாபை சேர்ந்த மக்பூல் அகமது என்ற சமூக சேவகரின் உதவியால் ஜவேரியா கானுமுக்கு தற்போது 45 நாள் ‘விசா’ வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஜவேரியா கானும் வாகா எல்லை வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று வந்தார். அவரை வாகா எல்லையில் வருங்கால கணவர் சமீர் கானும், அவரது தந்தையும் வரவேற்றனர்.

கடைசியில் இந்தியா வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய ஜவேரியா கானும், அதற்கு அனுமதி வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். சமீர் கானை மணந்துகொண்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

கடவுளிடம் தாங்கள் வைத்த வேண்டுகோள் நிறைவேறிவிட்டதாகவும், திருமண பந்தத்தில் இணையும் தங்களின் கனவு நனவாகும் தருணம் வந்துள்ளதாகவும் இந்த ஜோடி ஒரு சேர மகிழ்ச்சி பொங்க கூறியது. இவர்களின் திருமணத்தை அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, ஜவேரியா கானுமின் ‘விசா’வை நீட்டிக்க இந்திய அரசுக்கு விண்ணப்பம் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்திய காதலரை மணக்க பாகிஸ்தான் பெண் சீமா குலாம் ஹைதர் இந்தியா வந்தார். பாகிஸ்தானியரை திருமணம் செய்ய இந்திய பெண் அஞ்சு பாகிஸ்தான் சென்றார்.இப்படி ‘எல்லை கடந்த’ காதல் ஜோடி வரிசையில் தற்போது ஜவேரியா கானும்-சமீர் கானும் இணைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *