காசாவுக்குப் பதில் எகிப்து பகுதியில் விழுந்த குண்டு.
குறி தவறி தாக்குதல் தற்செயலாக நடந்த இந்தச் சம்பவம்குறித்து இஸ்ரேல் உடனடியாக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் எகிப்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் குழுவை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கில் காசாவை சரமாரியாகத் தாக்கிவரும் இஸ்ரேல் ராணுவம், ஞாயிற்றுக்கிழமை தவறுதலாக எகிப்து ராணுவம் மீது குண்டுவீசியுள்ளது. காசா எல்லைக்கு அருகே பாலஸ்தீனியப் பகுதியைக் குண்டுவீசித் தாக்கியபோது, அதன் டாங்கிகளில் ஒன்று தற்செயலாக எகிப்து பகுதியைத் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடந்திய இந்தத் தவறுதலான தாக்குதலில் வீரர்கள் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக எகிப்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
கெரெம் ஷாலோம் பகுதிக்கு அருகில் நடந்த இந்தச் சம்பவம்குறித்து இஸ்ரேலிய ராணுவம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறி தவறியதற்கான காரணம்குறித்து விவரங்கள் ஆராயப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் காசாவுக்கான வழங்கும் உதவிகளை எகிப்து நிறுத்தப்போவதில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
A short while ago, an IDF tank accidentally fired and hit an Egyptian post adjacent to the border in the area of Kerem Shalom. The incident is being investigated and the details are under review.
The IDF expresses sorrow regarding the incident.
— Israel Defense Forces (@IDF) October 22, 2023
