இஸ்ரேல் காசாவை கைப்பற்றுவதை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே காசா எல்லைப் பிரச்சனை தொடர்பாக போர் நடைபெற்று வருவதும், இது வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் இறந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் சில தினங்களுக்கு முன்பு காசாவினுள் நுழைந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாங்கு போருக்குப் பின்னர், காசாவின் பாதுகாப்பதே எங்கள் முழுமூச்சு என்றும் அதனை ஆணித்தரமாக உறுதியளித்துள்ளோம் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல், `பாலஸ்தீன மக்கள் காசாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதை ஒரு போதும் அமெரிக்கா அனுமதிக்காது என்றும், காசா பாலஸ்தீன மக்களின் நிலம். அந்த இடம் அவர்களுக்கே சொந்தம் என்று கூறியுள்ளார்.
காஸாவில் இருந்து இதுவரை 400 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் ரஃபா எல்லை வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளனர். வெளிநாட்டு கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே காஸாவில் இருந்து ரஃபா வழியாக எகிப்திற்கு செல்லஅனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.