Thiruchendur: 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை!

Advertisements

வருகிற 18-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழாவாகும்.

Advertisements

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் வருகிற 18-ந் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ந் தேதி ( சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி (சனிக்கிழமை)மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *