நியூ இயர் ஸ்பெஷல் ஸ்வீட்… டேஸ்டான கல்யாண வீட்டு கேசரி!

Advertisements

நியூ இயர்க்கு சுவையான டேஸ்டான சிம்பிளான கேசரி ஸ்வீட் செய்ய உங்களுக்கான டிப்ஸ் இதோ.

ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. “நியூ இயர்” என்றாலே கொண்டாட்டங்களும், கோலாகலங்களும் தான் நிறைந்திருக்கும். அதிலும் குறிப்பாக நியூ இயர்க்கு இனிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அக்கம்பக்கத்து விட்டார்கள் என அனைவருக்குமே இனிப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் நியூ இயர்க்கு சுவையான டேஸ்டான சிம்பிளான ஸ்வீட் செய்ய உங்களுக்கான டிப்ஸ்.

அதிலும் வசதி இல்லாதவர்கள் கூட டக்குனு ஒரு டேஸ்டான ஸ்வீட் செய்ய விரும்பினால் கேசரி தான் செய்வார்கள்… இந்தக் கேசரிய நியூ இயர்க்கு எப்படி ஸ்பெஷலா செய்யலாம்னு என்பதை இங்குப் பாக்கலாம்.

ரவையை நன்றாக நெய் ஊற்றி வருத்து கொள்ள வேண்டும். பின்பு வருத்தரவையை தண்ணீர் ஊற்றிக் கிளற வேண்டும். பின்பு வெந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் கடைசியாக வறுத்த பிரட் துளை சேர்த்து கிண்டி இறக்கினால் கேசரி சுவை அற்புதமாக இருக்கும்.

குங்குமப்பூ கேசரி பவுடரில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்தால் கேசரியின் நிறம், மணம் இரண்டுமே அசத்தலாக இருக்கும். ஏலக்காய் சேர்ப்பது போலக் கண்டிப்பாகக் குங்குமப்பூவும் சேர்ப்பது சிறப்பு. மேலும்இதனுடன் கீழ்கண்டவற்றை சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

தேங்காய் பால் ரவை வேகும்போது மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து, கேசரி செய்தால் சுவை மிக அருமையாக இருக்கும்.

உப்பு:

ரவையில் சர்க்கரை அல்லது நெய் சேர்த்து கிளறிய பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்தால் கேசரியில் இனிப்புச் சுவையை கூட்டி கொடுக்கும்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *