Paris Olympics: துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி!

Advertisements

துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் தோல்வியடைந்துள்ளார்.

பாரீஸ்:உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டிக்கு இந்தியா வீராங்கனை ரமிதா ஜிண்டால் தகுதி பெற்றிருந்தார்.

8 வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் ரமிதா ஜிண்டால் 145.3 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்துத் தோல்வியைத் தழுவினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *