உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பான நிகழ்வு நடைபெற்ற இடத்தில், ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த தாக்குதலுக்குக் காரணம் ரஷ்ய ஏவுகணைகள்தான், இது ரஷ்யாவின் பயங்கரவாதத்தை தவிர வேறில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய போர்க்காலச் சூழலில், இது போன்ற ஒரு எதிரியை எதிர்கொள்ளும்போது, மக்கள் பெருமளவில் கூடும் ஆயுதக் கண்காட்சிகளை – குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.



