
சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காகவே வாலிபர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் முன்பு நின்று கொண்டு வாலிபர் ஒருவர் சாலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். பின்னர் தீ முன்பு நின்று ‘ரீல்ஸ் வீடியோ’ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலைக் கண்டித்து பதிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.




