
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா என்றும், நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என பெருமிதம் தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தொடர்ந்து கோருவதாகவும், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.



