கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்கா.!

Advertisements

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க், தனது படைகளை குவித்து வருகிறது.டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.

கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தனக்கு தேவை எனவும், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் அதனை இணைக்க தயார் எனவும் டிரம்ப் கூறி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க் அங்கு தனது படைகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் கிரீன்லாந்து இணைப்பு தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ டென்மார்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை டென்மார்க் பாதுகாப்பு துறை மந்திரி ட்ரோல்ஸ் லண்ட் பவுல்சன் வரவேற்று உள்ளார். எனினும் இந்த சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்ற எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *