
“டிசம்பர் 9-ம் தேதி மதுரையில், ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது. அதில் கலந்துகொள்ள இங்கிருந்து நேரடியாக மதுரைக்கு செல்கிறேன்” என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் பலவீனமான திரைக்கதையால் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் , ‘அரசன்’ திரைப்படம் வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்தப் படத்தில் நடித்த பலரும் இதிலும் நடிப்பாகர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடை திறப்பு விழாவுக்காக நடிகர் சிம்பு மலேசியாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். அப்போது அவர் ரசிகர்களிடையே பேசுகையில், “வரும் டிச.9ஆம் தேதி மதுரையில் அரசன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
படப்பிடிப்பில் கலந்துகொள்ள,இங்கிருந்து நான் நேரடியாக மதுரைக்குச் செல்கிறேன்” என்றார். இதன் மூலம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது உறுதியாகியுள்ளது.
படம் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலையில் வெளியாகும் என கூறப்படுகிறது. வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




