Jammu Kashmir: ஓட்டல் ஊழியரின் செல்போனில் ஆபாசப் படங்கள்!

ஜம்மு காஷ்மீர்  மாணவர்கள் கண்டுபிடித்த உண்மை.. மும்பை ஓட்டல் ஊழியரின் செல்போனில் பெண்களின் ஆபாசப் படங்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்!

ஜம்மு காஷ்மீர், கத்ரா என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து மாணவர்கள் இந்தியாவின் முக்கிய இடங்களை சுற்றி பார்ப்பதற்காக  கல்லூரி ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா குழுவுடன்  சுமார் 800 பேர் பயணம் மேற்கொண்டனர்.  IRCTC யில் முன் பதிவு செய்து கல்லூரி பேராசிரியர்களுடன் நவம்பர் 19-ஆம் தேதி ஞானோதயா எக்ஸ்பிரஸில் புறப்பட்டுள்ளனர்.

சில இடங்களைச் சுற்றி பார்த்துவிட்டு,  மும்பை வந்தனர் மாணவர்கள். அப்போது மாணவர்கள் தங்குவதற்காக ராயல் பாம்ஸ் சாகி நாகாவில் உள்ள இரு ஹோட்டல்களில் முன்பதிவு செய்திருந்தனர். அந்த இரு ஓட்டல் அறைகளில் தங்கினர்.

இதில் ராயல் பாம்ஸ் என்ற ஹோட்டல் சுகாதார மற்றும் உணவு கூட சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவதிப்பட்ட மாணவர்கள் ராயல் பாம்ஸ் ஓட்டல் ரேட்டிங்கை வலைதளத்தில் தேடியுள்ளனர். அப்போது  ராயல் பாம்ஸ் ஓட்டலில் சமீபத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ரெய்டு நடந்த செய்தி தெரிந்துள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அன்று இரவு ஓட்டலில் பவர் கட் ஆனதால் மாணவர்கள் அங்கும் இங்கும் சுற்றியுள்ளனர். அதில் சில மாணவர்கள் ஊழியர் ஒருவரின் செல்போனை பார்க்கையில், அதில் பெண்களின் ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்துள்ளன.

இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பயந்து போயுள்ளனர். ஹோட்டலில் நடக்கும் இத்தகைய செயலை ஹோட்டலின் உரிமையாளரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக ராயல் பாம்ஸின் உரிமையாளருக்கு தெரிவித்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. வெளியூர் சென்று தங்கும் விடுதிகளில் தங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *