கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆளுங்கட்சியிடம் விலைபோனக் காரணத்தினால், இன்றைக்கு இடைத்தேர்தல் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் பணிகள் குறித்து, திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆளுங்கட்சியிடம் விலைபோனக் காரணத்தினால், இன்றைக்கு இடைத்தேர்தல் வந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியின் சாதனைகளைக் கூறி மக்களிடத்தில் சென்று வாக்குப் பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியால்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, நம் தயவில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.
120 நாட்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிப்பதாகக் குற்றம்சாட்டினார். நாம் தவறு செய்துவிட்டோம், திமுகவை இழந்துவிட்டோம் என்று மக்கள் இன்றைக்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். எனவே, நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களிடம் மீண்டும் நாம் தோற்றுவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.


