Thiruvanmiyur : காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.!

திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அவர் மாணவா்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் அமா்ந்து காலை உணவு சாப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44 ஆயிரத்து 984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவர்.
இந்த திட்டத்துக்காகக் கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *