Milk dealer: துடிக்கத் துடிக்க வெட்டிக்கொலை!

Advertisements

பால் வியாபாரியைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி பண்டாரம் பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 27). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் பால் வியாபாரத்தை முடித்து விட்டுத் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் அவர் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது மோட்டார் சைக்கிளைப் போட்டுவிட்டு தப்பி ஓடினார். எனினும் அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

கொலைகுறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று நந்தகுமார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரைக் கொலை செய்த கும்பல் யார்? எதற்காகக் கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தைத் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *