The Lord: உனக்கு ஒரு எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க விரும்புகிறார்!

தேவன் உனக்கு ஒரு எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க விரும்புகிறார்.

எதிர்காலம் என்னவென்று தெரியாமல், உன் வாழ்விற்குள்ளேயே ஒரு சிறைக்கைதியாய் இருப்பதுபோல உணர்கிறாயா? உனக்கு முன்பாக ஒரு உயர்ந்த மதில் தடையாக இருப்பது போல தோன்றுகிறதா? உனக்கு ஒரு நற்செய்தி கூறுகிறேன்… கர்த்தர் உனக்கு ஒரு புதிய எதிர்காலத்தையும், ஒரு புதிய தொடுவானத்தையும் கொடுக்க விரும்புகிறார்.

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (பரிசுத்த வேதாகமத்தில் எரேமியா 29:11ஐ பார்க்கவும்)

பெரு நகரங்களில் வசிக்கும் பலர் போல, ஒருவேளை, நீ ஒரு குறுகிய முற்றத்திலோ அல்லது ஒரு சிறிய இடத்திலோ இருப்பது போன்ற சூழலில் இருக்கலாம்! கண்களை மூடும்போது மட்டும், பரந்து விரிந்திருக்கும் வானம் போன்ற விசாலமான இடத்தின் சூழலைக் காணலாம். ஆனால் உன் மாம்சீகக் கண்களால் பார்க்கும்போது, அவை அப்படித்  தோற்றமளிப்பதில்லை.

நம் வாழ்விலும் கூட சில சமயங்களில் வானளவு உயர்ந்த சுவர் ஒன்று நம் முன் எழும்பி சூரியனையும் அதன் பிரகாசத்தையும் நம்மிடமிருந்து மறைப்பது போலத் தோன்றும். இந்த சுவர் நிரந்தரமாக இருந்துவிடுமோ என்ற அச்சமும் எழலாம்.

ஆனால், நல்ல தகப்பனாகிய நம் தேவன், உனக்கு மீண்டும் ஒரு எதிர்காலத்தைக் கொடுத்து, பிரகாசமான தொடுவானத்தை உன் முன் வைக்க விரும்புகிறார். என் நண்பனே/தோழியே இதை நீ நம்புகிறாயா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *