
ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு குஜராத் மகாராஷ்டிரா கோவா கேரளா வளைகுடா நாடுகளின் ஆழ்கடல் பகுதிகளில் தங்கி இருந்து மீன்பிடித் தொழிலை ஈடுபட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காகக் கடல் மார்க்கமாகச் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர் – குளச்சல் தேங்காய்ப்பட்டிணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இன்று மாலைக்குள் வந்து சேர்ந்து விடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது –
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மீனவர்கள் சொந்த ஊர் வருவதால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் களைகட்டி உள்ளது -கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஈஸ்டர் பாண்டியையும் தவக்காலத்துடன் நிறைவு செய்து கொண்டாடுகின்றனர் அந்த வகையில் உலகம் முழுவது வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை குளச்சல் தேங்காய்ப்பட்டிணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து ஏராளமான விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் 15 நாள் 20 நாள்வரை ஆழ்கடலில் தங்கி இவர்கள் மீன் பிடித்துத் தொழில் செய்து வருகின்றனர் இது போன்று குஜராத் கோவா கேரளா மற்றும் வளைகுடா நாடுகளிலும் குமரி மாவட்ட மீனவர்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் ஈஸ்டர் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அந்தப் பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடல் மார்க்கமாகச் சொந்த ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர் இன்று மாலைக்குள் அனைவரும் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் வந்து சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை முடிந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி மீண்டும் அவர்கள் தொழிலுக்குச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது – ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மீனவர்கள் சொந்த ஊர் வருவதால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் களைகட்டி உள்ளது –



