குட்டி நீர்வீழ்ச்சி,சுடச்சுட மீன் வறுவல் கம்மி பட்ஜெட்டில் சூப்பர் ஒன் டே ட்ரிப்! கொடிவேரி அணை…
ஈரோடு மாவட்டதில் இருந்து 50 கிமீ தூரத்திலும், கோயம்பத்தூரில் இருந்து 70கிமீ தூரத்திலும், சத்தியமங்கலத்தில் இருந்து 8 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள இந்த கொடிவேரி அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான அணையாகும். தடுப்புகளுடன் அமைக்கப்பட்ட தடுப்பணை, பரிசல் பயணம், மீன் பிடிப்பது, அணைக்குள் நீச்சல், குழந்தைகள் பூங்கா, ஊற்றுகளில் குளியல், சுடச்சுட மீன்குழம்பு சாப்பாடு என இந்த இடத்தில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. ஈரோடு மற்றும் கோயம்பத்தூரில் இருந்து ஒரு நாளில் சுற்றிப் பார்க்க இது ஒரு அட்டகாசமான இடமாகும். இந்த அழகான இடத்தைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!
கம்மி பட்ஜெட்டில் சூப்பர் ஒன் டே ட்ரிப்:
உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நீண்ட காலமாக எங்காவது கம்மி பட்ஜெட்டில் வெளியே சென்று வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிரிக்கிறீர்களா! அப்படியானால் ஈரோடு மற்றும் கோயமுத்தூர் வாசிகளுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் மக்களே. மதிய சாப்பாடு, பரிசல், நுழைவுக்கட்டணம் எல்லாம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 100 இருந்தால் போதும்! இந்த இடத்தில் அழகாக பரிசலில் சென்று, குளித்து மகிழ்ந்துவிட்டு, மீன் குழம்புடன் சாப்பாடு ஒரு பிடி பிடித்துவிட்டு வரலாம்!
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது பழமையான அணை 1125 ஆம் ஆண்டில் கொங்காளுவன் என்ற மன்னரால் பவானி ஆற்றின் மீது 25000 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்குவதற்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 897 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான அணையாகும். முதல் இடத்தில் இருப்பது கல்லணை என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. நீங்கள் இதனைக் கண்ட உடனே எப்படி நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தடுப்பணைகளுடன் கூடிய இந்த அமைப்பை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் வியப்பில் ஆழ்வது உறுதி. பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், அழகான உயிரினங்கள் கொண்ட பைரோடன் தீவு! நீங்கள் அங்கே என்னவெல்லாம் செய்யலாம்:
குழந்தைகள் பூங்கா – அணையின் நுழைவுப் பகுதியிலேயே பல சுற்றுலா அம்சங்களுடன் கூடிய அழகிய பூங்கா ஒன்று குழந்தைகளுக்காக கட்டப்பட்டுள்ளது. இதில் கட்டணம் எதுவும் இல்லை குழந்தைகள் இலவசமாக எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமானாலும் விளையாடலாம்.
நீர்வீழ்ச்சி – கொடிவேரி அணையிலிருந்து விழு நீரோட்டத்தால் சிறு நீர்வீழ்ச்சிகள் போன்ற அமைப்பு உருவாகுகிறது. நீர்வீழ்ச்சி கனமாக இல்லாததால், யார் வேண்டுமானாலும் எளிதாக நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியை அடைந்து குளித்து மகிழலாம். சுற்றிலும் தடுப்புகள் நிறைய போடப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்றது.
குளத்தில் நீச்சல் – நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதும் நீந்துவதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பரிசல் பயணம் – 15 முதல் 20 நிமிடங்களுக்கு பரிசல் செய்வதும் இங்கு அனுமதிக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு இலவசம், பெரியவர்கள் மட்டும் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும். மீன் குழம்பு சாப்பாடு – இங்கே பல்வேறு மீன் கடைகள் இருப்பதை நீங்கள் காணலாம். வெறும் ரூ. 60 கொடுத்து மீன் வறுவல், மீன் குழம்புடன் சுடச்சுட சுவையாக சாப்பிடலாம்.
நுழைவுக்கட்டணம் இந்த இடத்திற்கு செல்ல அனைவரும் ரூ. 5 செலுத்தி நுழைவு டிக்கெட் பெற வேண்டும். பைக் பார்க்கிங்கிற்கு ரூ. 10, கார்களுக்கு ரூ. 20, வேன்களுக்கு ரூ. 50 ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.