Jammu and Kashmir: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்!

Advertisements

Jammu and Kashmir | Encounter | Parigam

காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

புல்வாமாவின் பரிஹம் கிராமத்தில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தியபோது அங்குப் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இறுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *