
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.
இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் தற்போது தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கியது கரூரில் மரணமடைந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுச் செயலாளர் என். ஆனந்த் பேசினார்.
இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் தற்போது தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கியது கரூரில் மரணமடைந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுச் செயலாளர் என். ஆனந்த் பேசினார்.
அதில், “நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. பல சோதனைகளைத் தாண்டி வந்துள்ளோம். விஜயின் உழைப்புக்கு 30 ஆண்டுகள் தாண்டி தனி வரலாறு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர் விஜய். நம் எதிரிகள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. இவரை அசைத்துப் பார்க்க முடியாது. விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை. அவர் கைகாட்டும் திசையில் புதிய வேகத்தில் பயணிக்கவிருக்கிறோம். விஜயை 2026ல் முதல்வராக சபதம் ஏற்க வேண்டும்” என்று பேசினார்.
அதில், “நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. பல சோதனைகளைத் தாண்டி வந்துள்ளோம். விஜயின் உழைப்புக்கு 30 ஆண்டுகள் தாண்டி தனி வரலாறு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர் விஜய். நம் எதிரிகள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. இவரை அசைத்துப் பார்க்க முடியாது.
தொடர்ந்து பொதுக்குழு தீர்மானம் வாசிக்கப்பட்டது. தீர்மானத்தை வாசிக்க கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் வி.பி. மதியழகன் அழைக்கப்பட்டார். கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் சிக்கி கைதானவர் வி.பி. மதியழகன். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தற்போது ஜாமினில் இருக்கும் இவரை பொதுக்குழு தீர்மானம் வாசிக்க அழைத்தனர். அப்போது மேடையேறிய மதியழகனை விஜய் தனது அருகில் அழைத்து கட்டியணைத்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் காலில் விழுந்து மதியழகன் ஆசி வாங்கிவிட்டு தீர்மானத்தைப் படிக்கச் சென்றபோது ‘கழகத்தின் தியாகி மதியழகன்’ என்று கூட்டத்தில் குரல்கள் ஒலித்தன.



