ஈழ தமிழர்களுக்காக யாரை எதிர்த்தாரோ.. நெட்டிசன்கள் சிரிப்பாய் சிரிப்பு..!

Advertisements

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேசிய உரைகளின் தொகுப்பான ‘Vaiko in Parliament’ புத்தக வெளியீட்டு விழா  புது டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொள்வார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. மாறாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார்.

புது டெல்லியில் கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்  நடந்த இந்த விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட, நூலின் முதல் பிரதியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டர்.  இவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்களும் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

தமிழக அரசியலைப் பொறுத்த வரை, சமீபகாலமாக விஜய்க்கு பெரும் ஆதரவாய் வைகோ இருந்து வருகிறார். தவெகவை ஆதரித்து திமுகவை கடுமையாக விமர்சித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஆட்சி போய்விட்டதே, இனி கமிஷன், பணம் குவியும் வாய்ப்பு இல்லை என சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜயின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டேன் என்றும், தவெகவுக்கு ஆபத்து ஏற்பட்டால் அதை தடுக்கும் போர் வாளாக இருப்பேன் என்றும் வைகோ கூறினார். திமுக பகல் கனவு காண வேண்டாம் என எச்சரித்த வைகோ, ஆயிரம் தாக்குதல்களையும் தாங்கும் நெஞ்சம் தனக்கு இருப்பதாக ஆவேசமாக பேசியிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பராகவும் விஜய் பார்க்கப்படுகிறார்.

இந்தச் சூழலில் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேடை ஏறியதும் , வேட்டி அணியும் பாரம்பரியம் மறந்த வைகோவும் அவரது மகனும் வழக்கம் போல தன்னிலை மறந்து உற்சாகமடைந்தனர். வைகோ போலவே உணர்ச்சிவசப்பட்ட அவரது மகன் சாமானியத் தொண்டன் போல ‘நாம் மேடையில் இருக்கிறோம்’ என்பதை மறந்து கோட் , பெல்ட் தெறிக்க  குதித்து குதித்து  ராகுல் காந்தி வாழ்க, ராகுல் காந்தி வாழ்க என்று விண்ணதிர கோஷமிட்டடார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.  இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள்… அதிர்ந்து போனார்கள். இணையத்தில் தந்தையையும் மகனையும் கடுமையாக  கலாய்ந்து வருகின்றனர்.  தன்னையும் தனது தந்தை ராஜீவ்காந்தியையும் அரசியல்ரீதியாக மட்டுமே வைகோ விமர்சித்தார். தனிப்பட்ட முறையில் அல்ல என்று கூறி, இந்த விழாவில் ராகுல்காந்தியும் பங்கேற்றுள்ளார். ஒரு கட்டத்தில், காங்கிரஸ் கட்சிதான் திமுகவுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களை கொன்று குவித்தது என்று வைகோ கடுமையான விமர்சனங்களை வைத்தது உண்டு.

பின்னர், அதே திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார். இப்போது, விஜயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் வைகோ.  ‘Vaiko in Parliament’ புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்பான “நாடாளுமன்றத்தில் வைகோ” நூல் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த தமிழ் பதிப்பு நூல் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதில் முதலமைச்சர்  விஜய் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே வைகோவுடன் பயணித்த எழுத்தாளர் சோ. தர்மன் ராகுல் காந்தியை வைத்து, தனது புத்தகத்தை வெளியிட்ட வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்குத் திட்டங்குளத்தில் திமுக கிளைச் செயலாளரா இருந்தவன் நான். ஒருகட்டத்துல எந்தக் கட்சியும் வேண்டாம்னுட்டு எழுத்துப் பக்கம் வந்துட்டேன்.

ஆனா அன்னைக்கு கோபால்சாமி கூட அரசியல் செஞ்சவங்கிற ஒரு முறையில என் கருத்தைச் சொல்றேன். இவ்ளோ வருஷம் டெல்லியில பேசினதை புத்தகமாக்குறது நல்ல விஷயம்தான். ஆனா டெல்லிக்கு இவ்வளவு காலமும் உங்களை அனுப்பி வச்சது யாருங்கிறது பார்க்கனும். மனுஷனா பிறந்தா நன்றி விசுவாசம் இருக்கணும்ங்க. நான் கூடதான் சாகித்ய அகாடமி விருது வரைக்கும் வாங்கிட்டேன்.

ஆனா இன்னைக்கும் எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் கி.ரா-வைத் தொடாம என் பேச்சை முடிக்கவே மாட்டேன். காரணம் எனக்கு இந்தத் துறையில் பாதையைக் காட்டினார். மொத்த வருஷத்துல ஒரு பீரியட் என்னவோ அதிமுக ஆதரவுடன் வைகோ நாடாளுமன்றத்துக்கு போயிருப்பார். மத்த எல்லா முறையும் திமுக ஆதரவுடனேயே நாடாளுமன்றத்துக்குப் போயிட்டு அங்க பேசினதை புத்தகமா போடுறப்ப ஒரு திமுக காரனுக்குக் கூடச் சொல்லலன்னா என்னங்க அர்த்தம்?

நியாயப்படி திமுக தலைவர் ஸ்டாலின் கையாலதான் புத்தகத்தையே வெளியிட்டிருக்கணும். தேர்தலுக்குப் பிறகு எதிரணிக்குப் போயிட்டாக் கூட ஸ்டாலின் கிட்டப் போய் புத்தகத்தை வெளியிடக் கேட்டா அவர் நிச்சயம் சரினு சொல்லி வந்திருப்பார். அதை விட்டுட்டு காலங்காலமா ராஜ்யசபாவுல யாரைத் திட்டித் தீர்த்தீங்களோ அவங்களையே கூப்பிட்டு விழாவை நடத்தறது முரணா இல்லையா? ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ்காரர்களை எவ்வளவு பேசியிருப்பார்.

அதே காங்கிரஸ் தலைவர் கையால் புத்தகம் வெளியிடறது நல்லாவா இருக்கு? என்று கடுமையாக சாடியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *