L Murugan:”பா.ஜ., இல்லைனா அதிமுக எதிர்க்கட்சி ஆகிருக்காது!

Advertisements

சென்னை: அதிமுக போட்ட பிச்சையில் 4 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் கிடைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், ‘பா.ஜ., மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது’ என்றார்.

”முளைச்சு மூனு இலை விடல… இரட்டை இலை பத்தி பேசுவதா?”: அண்ணாமலை மீது ஜெயக்குமார் பாய்ச்சல்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில், ”முளைத்து மூன்று இலை கூட விடவில்லை. அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார். அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். 2026ல் தனியாக நின்று ஒரு சீட் ஜெயித்து பாருங்கள்” என சவால் விடுத்திருந்தார்.

இது பற்றி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது. பா.ஜ., ஓட்டுகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *