கூடுவாஞ்சேரியில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனுஷ் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் டூரிஸ்ட் வேன் உரிமையாளர் தனசேகர்(28) அவரது நண்பர் வினோத் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.