சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்து புகழாரம் சூட்டினார் – அமைச்சர் வன்னியரசு.!

Advertisements

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வன்னியரசு திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், மக்கள் அமைதியையே விரும்புவதாகவும், மதவாத சக்திகள் அரசியல் செய்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார். பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்புகள் மத அரசியலுக்காக மக்களை அணிதிரட்ட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் மக்கள் மற்றும் தமிழக மக்கள் மதவாத அரசியலை முன்னெடுத்த பாஜகவுக்கும், பாஜகவின் குரலாக பேசிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தந்துள்ளனர் என்று தெரிவித்தார். உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடர சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு விசிக துணை நிற்கும் என்றும் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *