
ஜெர்மனியில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களின் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழகத்துக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழு நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு புறப்பட்டார். இந்நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதில், ஸ்டாலின் அப்பாவை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம் என்ற பதாகையுடன் சிறுமி ஒருவரும், மேலும் ஏராளமான ஜெர்மனி வாழ் தமிழர்கள் குடும்பத்துடன் வந்து முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
அவர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைத்தள பதிவில், இங்குள்ள எனது தமிழ்க் குடும்பத்தின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிருந்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


