Thandatti: இரண்டு சர்வதேச விருதுகள்!

பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பசுபதி நடித்த தண்டட்டி திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

கிராமத்து மக்களின் வாழ்க்கையை அழகாகக் கூறும் படம் தான் தண்டட்டி. தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ரோகிணி வயது மூப்பினால் இறந்து போகிறார். மரணத்திற்கு பிறகு அவர் காதில் அணிந்திருக்கும் தண்டட்டி காணாமல் போகிறது. அதைச் சுற்றி நடக்கும் உறவினர்களின் சுயநலமும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாதி ஆணவமும், பேராசை கொண்ட மகள்கள், அக்கறையற்ற மகன் எனப் பாமர மக்களின் வாழ்வியல் சூழலைத் தண்டட்டி படம் கண்முன் காட்டி வரவேற்பை பெற்றிருக்கார் இயக்குநர் ராம் சங்கையா.


கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி ரிலீசான இந்தத் திரைப்படத்தில் பசுபதி, ரோகிணி, முகேஷ்க், விவேக் பிரசன்னா எனப் பலர் நடித்துள்ளனர். இதில் போலீஸ்காரராக வரும் பசுபதி தனது நடிப்பில் எதார்த்தை காட்டி இருப்பார். காணாமல் போன தண்டட்டியை கண்டுப்பிடிக்க அவர் முயற்சிப்பதும், உறவுகளின் சலசலப்பை சமாளிப்பதும் சவாலானதாகப் பசுபதி நடித்து இருப்பார்.

திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தாண்டி ஓடிடி தளத்திலும் தண்டட்டி படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தண்டட்டி படம் பெங்களூருவில் நடைபெற்ற புதுமையான சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. தமிழில் சிறந்த படம் என்ற வகையில் ஒரு விருதும், சிறந்த தமிழ் நடிகர் பசுபதி என்ற வகையில் இரண்டு விருதுகளைத் தண்டட்டி படம் வாங்கி குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *