Leo Collection: 438 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை!

Advertisements

438 கோடியைத் தாண்டி வசூல் செய்து ‘லியோ’ திரைப்படம் சாதனை!

தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து, திரையரங்கில் வெளியான நிலையில், வெளியான நாளிலிருந்து வசூலில் மிரட்டி வருகிறது. மேலும் இப்படத்தின் இந்திய வசூல் நிலவரம்குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம், இந்தியா மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. நேற்றைய தினம் இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்த தகவல் வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் உச்சாகமடைய செய்தது.

இதைத் தொடர்ந்து இந்திய வர்த்தக அறிக்கைகளின்படி, ‘லியோ’ இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் ரூ.200 கோடி வசூலை தாண்டியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் உலக அளவில் லியோ 438 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களை மட்டுமின்றி, படக்குழுவினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 23ஆம் தேதி, வசூல் நிலவரப்படி ‘லியோ’ படம் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் ரூ.7 கோடியும், கர்நாடகாவில் ரூ 3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 2.50 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் LCU படமாக வெளியாகியுள்ள லியோ, ஒருபுறம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. நாளைய தினம், 500 கோடியை இப்படம் எட்டுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதையில் உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *