
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வணிகப் பேச்சுக்கள் இருநாடுகளிடையான வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ள சீன அதிபர் சி ஜின்பிங், தகராறு செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று தைவானை எச்சரித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்குப் பின் அமெரிக்க அதிபர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதன்முறையாகும். சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்குச் சென்றுள்ள டொனால்டு டிரம்புக்கு அங்குச் சிறப்பான வவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் சீன அதிபர் சி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய தலைவர்களும் இருநாட்டுப் பிரதிநிதிகளும் பல்வேறு பங்கேற்கும் மாநாடு தொடங்கியது. பல்வேறு துறைகளில் இப்போதுள்ள வணிகத்தை மேலும் அதிகரிப்பது குறித்துப் பேச்சு நடத்தினர்.
இந்த மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய சீன அதிபர் சி ஜின்பிங் உலகின் மிகப்பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட இரண்டு நாடுகளுக்கும் நிலையான உறவுகள் இருந்தால் அது ஒட்டுமொத்த உலகுக்குமே பயனளிக்கும் எனத் தெரிவித்தார்.
இரு நாடுகளும் ஒத்துழைத்தால் அதனால் இரு நாடுகளும் பயனடையும் என்றும், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் சி ஜின்பிங் தெரிவித்தார். இந்த வணிகப் பேச்சுகளால் இரு நாடுகளிடையே நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். தைவானுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளார். தீவுப் பகுதியான தைவானைப் புவியியல் ரீதியாகச் சீனா உரிமை கோரி வரும் நிலையில், அதற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது.



