Kuwait Fire Accident :காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவைத் தமிழக அரசு ஏற்கும்!

Advertisements

குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவைத் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தில் மாங்காப் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழர்கள் சிலர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் பாடுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவைத் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்காக அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்குறித்த விவரங்கள் கிடைத்த பிறகு அவர்களது உடல்களைத் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், காயமடைந்த தமிழர்கள்குறித்த விவரங்களைக் கண்டறிந்த பிறகு அவர்களது சிகிச்சைக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அயகலத் தமிழர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *