ஈரான் அரசுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!

ஈரான் 10 நாட்களுக்குள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும்,

இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து, அவர் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்க ராணுவம் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

எனவே, இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் உருவாகியுள்ளதால், உலக நாடுகளிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *