Advertisements

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது சாதாரண பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் வரை பேசும் பொருளாக இருக்கிறது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள். இதுவரை ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் நிலையில் எந்த கட்சியுடன் இணைய போகிறார். என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார்.
அந்த வகையில் காளியம்மாள் புதிய அவதாரம் எடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். வெகு விரைவிலேயே புதிய அமைப்பு ஒன்றை தொடங்கவிருக்கும் காளியம்மாள் பற்றிய பரபரப்பு செய்திகளை இப்போது நாம் பார்க்கலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவரது கணவர் பிரபாகரன் இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது .
காளியம்மாள் தன்னந்தனி ஆளாக சமூக சேவைகள் செய்து வந்த நிலையில் அவரை நாம் தமிழர் கட்சியில் சீமான் இணைத்துக் கொண்டார்
அவருக்கு மகளிர் பாசறை ஒருங்கிணைப்பு தலைவர் பதவியும் தரப்பட்டது நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த பேச்சாளராக வலம் வந்தவர் காளியம்மாள்.
ஆரம்ப கட்டத்தில் இணையதளம் மூலமாக காளியம்மாள் மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டார். இணையதளங்களில் அவரது பேச்சை இலட்சக்கணக்கான பேர் பின் தொடர்ந்தார்கள் . இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் அவர் பொதுக்கூட்ட மேடைகளில் காரசாரமாக பேசி வந்தார் . தற்போதைய சூழ்நிலையில் காளியம்மாள் போல ஒரு ஆக்ரோஷமான அரசியல் தலைவி யாரும் இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு அறிவாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவராக காளியம்மாள் திகழ்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . நாகப்பட்டினம் பகுதிகளில் தனக்கென தனியாக கோஷ்டி சேர்த்ததாகவும் அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கி தன்வசம் வைத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது . இதனை தொடர்ந்து காளியம்மாள் குறித்து சீமான் பேசிய எச்சரிக்கை பேச்சு இணையதளத்தில் வைரல் ஆனது முதலில் இது சீமானால் மறுக்கப்பட்டாலும் பின்னர் அவர் உண்மையை ஒத்துக் கொண்டார் .
இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி அழைப்பிதழ்களில் காளியம்மாள் பெயரை குறிப்பிடும் பொழுது சமூக ஆர்வலர் என்று மட்டுமே அடையாளம் காட்டப்பட்டார் . இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாளை பொறுத்தவரையில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கு உடையவர் . கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவர் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்றார் நாம் தமிழர் கட்சியில் அதிக வாக்குகள் பெற்றவர் காளியம்மாள் என்ற பெருமைக்குரியவர் .
இதனிடையே கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் தொடர்ந்து ஊடகங்கள் மூலமாக பேசி வருகிறார். நிச்சயமாக பத்திரிக்கையாளர் முன்னிலையில் எனது அரசியல் வெளிப்பாடு இருக்கும். நான் சார்ந்து இருக்கிற மீனவ சமுதாய மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு வந்தார் .
அதேசமயம் திரை மறைவில் முதற்கட்டமாக அதிமுகவிலிருந்து ஒரு முன்னாள் அமைச்சர் காளியம்மாளை தொடர்பு கொண்டு அதிமுகவில் இணையும் படி கேட்டுக் கொண்டார். இதன் நிமித்தமாக காளியம்மாள் எடப்பாடி பழனிச்சாமியை நேருக்கு நேராக சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது.
இருந்த போதிலும் தனது முடிவு எதையும் வெளிப்படுத்தாத காளியம்மாளிடம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இறுதி கட்டத்தில் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை . முன்னதாக நாகப்பட்டினம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் காளியம்மாள் நிறுத்தப்படுவார் என்ற பேச்சு ஏற்பட்டது . தற்பொழுது தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமார் அங்கு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
எனவே காளியம்மாளுக்கு நாகப்பட்டினம் தொகுதி ஒதுக்கி தரப்படுவதாக பேசிய பேச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது . இந்த நிலையில் காளியம்மாளை மீண்டும் நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொள்ளலாம். என சீமான் ஒரு முடிவுக்கு வந்தார். ஆனால் காளியம்மாள் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக தகவல் வந்ததை தொடர்ந்து சீமான் தனது முடிவை கைவிட்டார் என தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் காளியம்மாளை பாஜகவில் இணைக்கும்படி டெல்லி பாஜக மேலிடம் வற்புறுத்தி வருகிறது. தக்க பதவி தருவதாகவும் நாகப்பட்டினம் தொகுதியை ஒதுக்கி தருவதாகவும் பேசி வருகிறார்கள் . இறுதிக்கட்டமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என காளியம்மாள் முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது . இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சரத்குமார் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து எந்தவித பதவியும் தரப்படவில்லை.
அதுபோல் தன்னையும் ஒதுக்கி வைத்து விடலாம் என காளியம்மாள் கருதுகிறார் . இதன் ஒரு கட்டமாக புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி ஏன் கூட்டணியில் சேர கூடாது என்ற புதிய ஆலோசனையில் காளியம்மாள் ஈடுபட்டு வருகிறார் . நாகப்பட்டினம் தொகுதி முழுவதும் காளியம்மாளுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதால் மீனவர் சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஒரு புதிய அமைப்பை தொடங்கலாம் என காளியம்மாள் முடிவு செய்ததாக தெரிகிறது .
இந்த புதிய அமைப்பு மூலம் பாரதிய ஜனதா கட்சியில் தனக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கி தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று காளியம்மாள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது . தற்பொழுது இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் காளியம்மாளின் ஆலோசனைகள் சொல்லப்பட்டு இருக்கிறது .
காளியம்மாளை பொறுத்தவரையில் தற்போது மிகப்பெரிய பிரச்சார பீரங்கியாக இருப்பார் என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் காளியம்மாளின் புதிய திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது .
இதற்கிடையே வருகிற ஜனவரி மாதம் தனது நிலை குறித்து பத்திரிகையாளர்களை அழைத்து தெரிவிக்கலாம் என ஆலோசித்து வந்த காளியம்மாள் தற்போது வருகிற டிசம்பர் மாதமே தனது முடிவை தெரிவிக்க இருக்கிறார் . இதன் மூலம் தமிழக அரசியலில் காளியம்மாள் புதிய அவதாரம் எடுக்க முடிவெடுத்திருக்கிறார்.
காளியம்மாள் தேர்தல் களத்தில் இறங்கும் பொழுது அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதும் முக்கிய செய்தியாகும் . இது தவிர காளியம்மாளுக்கு பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருப்பதால் அவரது வருகையை தமிழக தேர்தல் களம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இது போன்ற முக்கிய அரசியல் செய்திகளுக்கு ஜெம் தொலைக்காட்சியுடன் எப்பொழுதும் இணைப்பில் இருங்கள் …
Advertisements



