Thalapathy 69:மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?

Advertisements

விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக நடிகர் விஜய் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இருவரும் சேர்ந்து 3 படங்களில் நடித்துள்ளனர். அதன்படி, 2014-ல் வெளியான ‘கத்தி’, 2016-ல் வெளியான ‘தெறி’ மற்றும் 2017-ல் வெளியான ‘மெர்சல்’ ஆகிய படங்களாகும்.

இருவரும் இணைந்து நடித்த இந்த 3 படங்களும் மெகா ஹிட் அடித்தன. இப்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளதால் இதுவும் மெகா ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *