தென்காசி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

Advertisements
தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 12 இலட்சத்து 64 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான கமல்கிஷோர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 12 இலட்சத்து 64 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 6 இலட்சத்து 18 ஆயிரத்து 63 ஆண் வாக்களர்களும், 6 இலட்சத்து 46 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
அதிக அளவாகத் தென்காசித் தொகுதியில் 2 இலட்சத்து 79 ஆயிரத்து 585 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *